இத்திட்டத்தில் என்ன செய்யப் போகிறோம்?

பொது மொழிபெயர்ப்பில் மொத்தம் 1340 அதிகாரங்கள் உள்ளன. இவற்றோடு 75 நூல்களின் முன்னுரைகள், 4 பிரிவு முன்னுரைகளும் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் விவிலியத்தின் ஒரு அதிகாரத்தை தமக்கென எடுத்துக்கொண்டு, அதைப் பிழைதிருத்துவோம். பிழைதிருத்துகையில் பின்வரும் பிரிவுகளைக் கருத்தில் கொள்வோம்:

எழுத்துப்பிழைகள்

நிறுத்தக்குறிகள்

வடிவமைப்பு



இதனால் விளையும் பயன் என்ன?

இணையத்தில் ஒரு அழகிய வடிவமைப்பில், படிக்க எளிமையான விவிலியம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதோடு நிரலர்களுக்கு ஊக்கமளித்து, விவிலியத்தை அடிப்படையாகக்கொண்ட மென்பொருட்களை உருவாக்க இது ஏதுவாக இருக்கும். எடுத்துக்காட்டாக ‘வழிபாட்டு நாட்காட்டி’, ‘ஒருவருடத்தில் விவிலியம்’, ‘திருப்புகழ்மாலை’ முதலிய பல மென்பொருட்களை உருவாக்க இது அடிப்படையாக அமையும்.

இதில் பங்கேற்க தேவையானவை எவை?

இத்திட்டத்தில் பங்களிக்கத் தேவையானவை:

தமிழ் விவிலியத்தின் அச்சுப்பதிப்பு

தமிழ் விவிலியப் பொது மொழிபெயர்ப்பின் அச்சுப்பதிப்பு இன்றியமையாதது ஆகும்.

ஓரளவு ஆங்கிலம் புரிந்து கொள்ளும் ஆற்றல்

நாம் உருவாக்குவது தமிழ் விவிலியமாக இருப்பினும், அதைச் செய்ய தேவைப்படும் தொழில்நுட்ப சிக்கல்களினால் இதன் வழிகாட்டி ஆவணங்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு மணி நேரம்

உங்களின் நேரத்தில் ஒரு மணி நேரம் செலவிட்டு இத்திட்டத்தில் ஒரு அதிகாரத்தையேனும் திருத்தவும்.

இணையம் + உளாவி

இணைய வசதியும் ஏதேனும் ஒரு நவீன உளாவியும் தேவை.